ADDED : ஜூலை 17, 2024 12:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி : திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி அருகே கடுகுதடி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் 29.
தேவதானப்பட்டியில் நாகராஜன் என்பவரது தென்னந்தோப்பில் ஒன்றரை ஆண்டுகளாக மனைவி, குழந்தையுடன் தங்கி வேலை செய்தார். தோட்டத்தில் வேலை செய்யும் போது சங்கரை பாம்பு கடித்தது. தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி இறந்தார். தேவதானப்பட்டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.