ADDED : ஜூலை 11, 2011 10:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வருஷநாடு : கடமலைக்குண்டு வட்டாரத்தில் சிறு,குறு விவசாயிகள் கணக்கெடுக்கும் பணி நடக்கிறது.
கண்டமனூர்,கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, நரியூத்து, தங்கம்மாள்புரம், மேலப்பட்டி, பலூத்து கிராமங்களில் வேளாண்மைத்துறை உதவி இயக்குனர் சங்கரன், வேளாண்மை அலுவலர் முருகன், உதவி வேளாண்மை அலுவலர் மகாராஜன் தலைமையில் சிறு, குறு விவசாயிகள் குறித்த கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளன்னர். உதவி இயக்குனர் சங்கரன் கூறுகையில்: சிறு, குறு விவசாயிகள் தங்களது நிலத்தின் மூன்று ஆண்டு பயிரிடப்படும் பயிர் வகைகள் விபரம், தேவைப்படும் திட்டங்கள், வங்கி கணக்கு எண்கள், சிட்டா போன்ற ஆவணங்களுடன் பதிவு செய்து கொள்ளலாம்,' என்றார்.