/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கி.பி., 17ம் நுாற்றாண்டு நடுகல் கண்டுபிடிப்பு
/
கி.பி., 17ம் நுாற்றாண்டு நடுகல் கண்டுபிடிப்பு
ADDED : ஆக 18, 2024 02:14 AM

தேவாரம்:தேனி மாவட்டம் போடி, தேவாரத்தை சேர்ந்த ஈஸ்வரன் தகவலின் படி, ஓடைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சிவப்பிரகாசம் மற்றும் மாணவர்கள், தேவாரம் பிரம்புகட்டி ஓடையில் ஆய்வு மேற்கொண்டு, ஒன்றரை அடி அகலம் உள்ள கி.பி.,17ம் நுாற்றாண்டு நடுகல்லை கண்டறிந்தனர்.
பேராசிரியர் மாணிக்கராஜ் கூறுகையில், “இந்த நடுகல் ஐந்தடி உயரம், ஒன்றரை அடி அகலம் கொண்டது. இதில், வீரன் ஒருவன் வலது கையில் வாளும், இடது கையில் துப்பாக்கியும் பிடித்து சமமான நிலையில் நின்றபடி உள்ளது.
''இவ்வீரன் இப்பகுதியில் நடந்த ஏதோ ஒரு சண்டையில் இறந்த பின், அவரது இரு மனைவியரும் சதி எனும் உடன்கட்டை ஏறி தங்கள் உயிரை நீத்துள்ளனர் என்பதை வெளிகாட்டும் விதமாக வீரனுக்கு பக்கவாட்டில் சிற்பமாக வெட்டப்பட்டு உள்ளன. இப்பகுதி மக்கள் இதை தெய்வமாக வணங்கி வருகின்றனர்,” என்றார்.

