/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பிளஸ் 2 ஆங்கிலத்தேர்வில் 206 பேர் 'ஆப்சென்ட்'
/
பிளஸ் 2 ஆங்கிலத்தேர்வில் 206 பேர் 'ஆப்சென்ட்'
ADDED : மார் 07, 2025 08:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : மாவட்டத்தில் 54 மையங்களில் நடந்த பிளஸ் 2 ஆங்கிலத்தேர்வில் 12,986 பேர் பங்கேற்றனர். 206 பேர் தேர்வில் ஆப்சென்ட் ஆகினர்.
மாவட்டத்தில் 141 பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் 6271 பேர், மாணவிகள் 6792 பேர் என 13,063 பேர், தனித்தேர்வர்கள் 179 பேர்என மொத்தம் 13,242 பேர் ஆங்கிலத்தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தது.
இதில் பள்ளி மாணவர்கள் 12,832 பேர் உட்பட 12,986 பேர் தேர்வில் பங்கேற்றனர்.
பள்ளி மாணவர்கள் 101, மாணவிகள் 85 பேர் என 186 பேரும், தனித்தேர்வர்கள் 20 பேர் என 206 பேர் தேர்வு எழுதவில்லை. மாற்றுத்திறன் மாணவர்கள் 50 பேர் தேர்வு எழுதுவதில் விலக்கு பெற்றனர்.