/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சிறுமியை திருமணம் செய்தவருக்கு 31 ஆண்டு சிறை: தேனி போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

ADDED : மார் 29, 2024 06:05 AM

தேனி : போடி தனியார் பள்ளியில் படித்த 15 வயது சிறுமியை கடத்தி, சிறார் திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்த போடி புதுார் கொடிக்காபுளி வியாபாரி கிருஷ்ணன் 47, என்பவருக்கு 31 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
போடி தாலுகா பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி. அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்தார். இவரது பெற்றோர் வசிக்கும் தெருவில் கொடிக்காபுளி விற்பனை செய்ய சென்ற வியாபாரி, சிறுமியிடம் பழகி, ஆசை வார்த்தை கூறி, பெற்றோர் இல்லாத நேரத்தில் 2020 அக்., 27 ல் கடத்திச் சென்றார். பின் சிறுமியை திருமணம் செய்து அவரை பாலியல் பலாத்காரம் செய்தார். சிறுமி பெற்றோர் புகாரில் போடி டவுண் போலீசார் வியாபாரி கிருஷ்ணனை கைது செய்தனர். இந்த வழக்கு தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. அரசு தரப்பு வழக்கறிஞராக விவேகானந்தன் ஆஜரானார். விசாரணை முடிந்து நேற்று நீதிபதி கணேசன், குற்றவாளி கிருஷ்ணனுக்கு சிறுமியை கடத்திய குற்றத்திற்கு 10 ஆண்டுகள் சிறை, ரூ.10 ஆயிரம் அபராதம், பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்கு 20 ஆண்டுகள் சிறை, ரூ.10 ஆயிரம் அபராதம், சிறார் திருமணம் செய்த குற்றத்திற்கு ஓராண்டு சிறை உட்பட 31 ஆண்டுகள் சிறை, 20 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.