/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஐ.டி.ஐ., வளாகத் தேர்வில் 32 மாணவர்கள் தேர்வு
/
ஐ.டி.ஐ., வளாகத் தேர்வில் 32 மாணவர்கள் தேர்வு
ADDED : மார் 22, 2024 05:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: கொடுவிலார்பட்டி தேனி கம்மவார் சங்கம் ஐ.டி.ஐ.,யில் கோவை மார்க்ஸ் இன்ஜினியரிங் நிறுவனம் சார்பில் வளாகத்தேர்வு நடந்தது.
தேனி கம்மவார் சங்க தலைவர் நம்பெருமாள்சாமி தலைமை வகித்தார். ஐ.டி.ஐ., செயலாளர் பெருமாள்சாமி முன்னிலை வகித்தார். நிறுவன மனித வள உதவி மேலாளர் சீனிவாசமூர்த்தி, நிறுவன பொறியாளர்கள் சுந்தர், ராம்குமார் பங்கேற்று மாணவர்களை தேர்வு செய்தனர். இதில் 32 மாணவர்கள் தேர்வாகினர். வளாகத்தேர்வினை ஐ.டி.ஐ., முதல்வர் பிரகாசம் ஒருங்கிணைத்தார்.

