/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆட்டோவில் நாட்டு வெடிகுண்டு வைத்திருந்த 4 பேர் கைது
/
ஆட்டோவில் நாட்டு வெடிகுண்டு வைத்திருந்த 4 பேர் கைது
ஆட்டோவில் நாட்டு வெடிகுண்டு வைத்திருந்த 4 பேர் கைது
ஆட்டோவில் நாட்டு வெடிகுண்டு வைத்திருந்த 4 பேர் கைது
ADDED : மே 04, 2024 05:48 AM
தேவதானப்பட்டி: வழிப்பறி வழக்கில் நிபந்தனை ஜாமினில் வந்து தினமும் போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட வந்த சூர்யபிரகாஷ், ஆட்டோவில் வெடி குண்டு வைத்திருந்தாக இவரது நண்பர்கள் 3 பேருடன் கைதானார்.
பெரியகுளம் அருகே ஜெயமங்கலம் காந்திநகர் காலனியைச் சேர்ந்தவர் சூர்யபிரகாஷ் 25. இவர் வழிப்பறி வழக்கில் கைதாகி நிபந்தனை ஜாமினில் வந்துள்ளார்.
இவர் தினமும் ஜெயமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராகி கையெழுத்திட்டு வந்தார். தினமும் ஆட்டோவில் போலீஸ் ஸ்டேஷன் வருவார். நேற்று சூரியபிரகாசுடன் ஆட்டோவில் இருக்கும் நபர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் வந்தது.எஸ்.ஐ., முருகப்பெருமாள், ஆட்டோவை சோதனையிட்டதில் இரு நாட்டு வெடிகுண்டு இருப்பதை கண்டு பிடித்தனர். இதனை தொடர்ந்து சூரியபிரகாஷ், ஜெயமங்லகத்தை சேர்ந்த இவரது நண்பர்கள் பிரபுவையும் (28), 16, மற்றும் 18 வயது உடைய இருவரையும் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.