/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெண் கூட்டு பலாத்காரம்; 4 வாலிபர்களிடம் விசாரணை
/
பெண் கூட்டு பலாத்காரம்; 4 வாலிபர்களிடம் விசாரணை
ADDED : மார் 02, 2025 04:27 AM
பழனிசெட்டிபட்டி : தேனியில் கூட்டு பலாத்காரம் செய்ததாக, 24 வயது பெண் புகாரில் நான்கு வாலிபர்களிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்த, 24 வயதான திருமணமான பெண், குழந்தைகளுடன் வசிக்கிறார். நேற்று தேனி அனைத்து மகளிர் போலீசில் அவர் அளித்த புகாரில், 'நேற்று முன்தினம் பழனி செட்டிபட்டி பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்தபோது, டூ - வீலரில் வந்த இருவர் என்னை மிரட்டி அல்லிநகரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்கள் இருவர், மற்றொரு வாலிபர் என, மூவர் மிரட்டி கூட்டு பலாத்காரம் செய்தனர்.
'அங்கு வந்த 4வது வாலிபர் என்னை வீட்டில் விடுவதாக கூறி, டூ வீலரில் அழைத்துச் சென்றார். அவர், திண்டுக்கல் - குமுளி ரோட்டில் ஆதிப்பட்டி அருகே ஓரிடத்திற்கு அழைத்துச் சென்று, மிரட்டி சித்ரவதை செய்தார். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, குறிப்பிட்டிருந்தார். புகாரின் அடிப்படையில், அப்பெண் குறிப்பிட்ட ௪ பேரையும் பிடித்து, மகளிர் போலீசார் விசாரிக்கின்றனர்.