ADDED : ஏப் 29, 2024 05:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: போடி அருகே முத்துதேவன்பட்டியை சேர்ந்தவர் கணேசன் 48.
இவர் தனது உறவினர்களான கருணாகரன் 48. முத்துலட்சுமி 40. மாரீஸ்வரன் 12., மகி 11. ஆகியோருடன் நாகலாபுரம் செல்லும் ரோட்டில் ஆட்டோவில் சென்றுள்ளனர். அதிவேகமாக ஆட்டோ ஓட்டி சென்றதில் நிலை தடுமாறி ஆட்டோ கவிழ்ந்தது. இதில் கணேசன், கருணாகரன் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்து தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். போடி தாலுாகா போலீசார் ஆட்டோ டிரைவர் வசந்த் 30. மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

