/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேசிய தொழில் முனைவோர் திட்டத்தில் தொழில் துவங்க 50 சதவீத மானியம் தேனி உழவர் பயிற்சி மைய தலைவர் தகவல்
/
தேசிய தொழில் முனைவோர் திட்டத்தில் தொழில் துவங்க 50 சதவீத மானியம் தேனி உழவர் பயிற்சி மைய தலைவர் தகவல்
தேசிய தொழில் முனைவோர் திட்டத்தில் தொழில் துவங்க 50 சதவீத மானியம் தேனி உழவர் பயிற்சி மைய தலைவர் தகவல்
தேசிய தொழில் முனைவோர் திட்டத்தில் தொழில் துவங்க 50 சதவீத மானியம் தேனி உழவர் பயிற்சி மைய தலைவர் தகவல்
ADDED : செப் 13, 2024 06:04 AM
தேனி: தேசிய தொழில் முனைவோர் திட்டத்தில் வெள்ளாடு, பன்றி, நாட்டுக்கோழி வளர்ப்பு தொழில் துவங்க 50 சதவீத மானியம் வழங்கி, தொழிலுக்கான திட்ட அறிக்கை குறைந்த கட்டணத்தில் வழங்க ஏற்பாடு செய்து தரப்படும்.' என, தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலையின் கீழ் தேனியில் இயங்கி வரும் உழவர் பயிற்சி மையதலைவர் டாக்டர்ந.விமல் ராஜ்குமார் தெரிவித்தார்.
இப்பயிற்சி மையம் தேனி அரண்மனைப்புதுார் விலக்கு அருகே அமைந்துள்ளது. இப் பயிற்சி மைய தலைவர் கண்காணிப்பில் ஒரு இணைப் போராசிரியர், 2 உதவி போராசிரியர்கள் உள்பட 7 பேர் பணிபுரிய வேண்டும். ஆனால் தலைவர், டிரைவர் என இருவர் மட்டுமே பணிபுரிகின்றனர். இதனால் பயிற்சி வழங்குவதை தவிர பிற பணிகளில் பணிச்சுமையில் உள்ளனர்.
இதுவரை இம் மையத்தில் 200 க்கும் மேற்பட்டோர் பயிற்சி பெற்று சான்றிதழ் பெற்றுள்ளனர். இம்மையத்தின் சார்பில் தொழில்முனைவோர், கால்நடை வளர்ப்போர், விவசாயிகளுக்கு ஆடு, கோழி, வெள்ளாடு, பசு மாடு வளர்ப்போருக்கு பயிற்சி அளிப்பது, கால்நடை வளர்ப்போர், விவசாயிகளின் விளை நிலங்களுக்கு சென்று ஆய்வு செய்து, பல்கலையின் தொழில்நுட்பட தகவல்களை முதல் நிலை தகவல்களாக வழங்குவது, பல்கலை திட்டங்கள், தொழில்நுட்பட நடைமுறைகளை விவசாயிகளிடத்தில் கொண்டு சேர்த்தல், மத்திய, மாநில அரசு திட்டங்களை விவசாயிகளுக்கு கொண்டு சேர்த்தல் முக்கிய பணிகளாக செய்து வருகிறது. மையத்தின் செயல்பாடுகள குறித்து தினமலர் நாளிதழ் அன்புடன் அதிகாரி பகுதிக்காக பயிற்சி மைய தலைவர் பேசியதாவது:
தொழில் முனைவோர் திட்ட அறிக்கை தயாரித்தல் எவ்வாறு
புதிய தொழில் துவங்க பயிற்சி மையத்தின் பயிற்சி பெற்று முடித்த உடன், தொழில் துவங்குவதற்கான ஒட்டு மொத்த திட்ட அறிக்கை தயார் செய்தால் தான் வங்கிக்கடன் எளிதாக பெற முடியும். அதற்காக ரூ.1 லட்சம் மதிப்பிற்கு கட்டணமாக ரூ.250 பெற்று, கட்டணத்துடன் 18 சதவீத ஜி.எஸ்.டி., தொகையும் செலுத்தினால் திட்ட அறிக்கையை தயார் செய்து வழங்கி தொழில் துவங்க முடியும்.
பசுகள் சினை பிடிப்பதில் பிரச்னை அதிகம் வருகிறதே
சரிவிகித உணவுகளை கால்நடைகளுக்கு வழங்காத கால்நடை வளர்ப்போர், விவசாயிகளினால் இப்பிரச்னை அடிக்கடி ஏற்படுகிறது. இது தேனி மாவட்டத்தில் மட்டும் அல்ல. அனைத்து மாவட்டங்களிலும் உள்ளது. ஆனால் தேனி மாவட்டத்தில் கால்நடை எண்ணிக்கை அதிகம். அதனால் விவசாயிகள் புரிந்து கால்நடை டாக்டர்கள் பரிந்துரைத்த கலப்புத் தீவனம், தாது உப்புக்கள், பசுந்தீவனம் என பிரித்து தேவைக்கு ஏற்ப வழங்க வேண்டும். இவ்வாறு கொடுக்கும் போது சினை பிடிக்காமல் பாதிப்பாக உள்ள பசு சரிவிகித உணவு வழங்குவதால் விட்டமின் -இ, தாதுஉப்பு, செலினியம் என்ற வேதிப் பொருட்கள் கிடைக்கப் பெற்று 2 மாதங்களில் சினை பிடிக்க இனப்பெருக்க உருப்புக்கள் பலம் பெற்று, பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.
மாடுகளுக்கு உணவாக சோறு கொடுக்கலாமா
கால்நடைகளுக்கு மனிதர்கள் போன்று வயிறு அமைப்பு கிடையாது. மாட்டின் வயிற்றில் நான்கு இரைப்பை அமைப்புகள் இருக்கும். கால்நடைகளுக்கு வயிறு ஒரு நொதிகலன் போல் செயல்படும். நொதித்து அதிலிருந்து வரும் சத்துக்களை உறிஞ்சித்தான் ஆற்றலைப் பெரும். புல், வைக்கோல் போன்றவற்றை அதற்கான நுண்ணுயிர்களின் உதவியோடு நொதிக்க வைத்து, பின்புதான் அந்த உணவு செரிமாணம் ஆகும். இதனால்தான் மாடுகள், ஆடுகள் உணவு உண்ட பின் அசைபோடுவதை பார்க்கலாம். மனிதர்கள் உண்ணக்கூடிய ஸ்டார்ச்' எனும் அரிசி, கம்பு, கேழ்வரகு போன்ற மாவுச்சத்து அதிகம் நிறைந்த பொருட்களை வேகவைத்தோ, மாவாக்கியோ கால்நடைகள் குடிக்கும் தண்ணீரோடு கலந்து கொடுக்கின்றனர். பின் பாதிப்பு அதிகரிக்கும். இதனால் சோறு கொடுப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
இங்கு பயிற்சி பெற தகுதியானவர்கள் யார்
18 வயது நிரம்பிய, படித்த, படிக்காத விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் தாராளமாக பயிற்சி பெற்று சான்றிதழ் பெறலாம். இங்கு பசுமாடு, வெள்ளாடு, பன்றி, நாட்டுக்கோழி, செம்மறி ஆடு, ஒருங்கிணைந்த பண்ணையம் அமைப்பது குறித்த பயிற்சிகள் வழங்கப்படுகின்றனர். தமிழ்நாடு அறிவியல் பல்கலையின் உழவர் பயிற்சி மைய சான்றிதழ் வழங்கப்படுகிறது.
பயிற்சி மையத்தில் பிற சேவை என்ன
மையத்தின் கால்நடைகள் வளர்ப்பு பயிற்சி மட்டும் இன்றி, இடுபொருட்களான தாது உப்பு ஒரு கிலோ ரூ.75 விலைக்கு கிடைக்கும். ஆடுகளுக்கு வழங்கும் தாதுஉப்பு கட்டி ஒன்று ரூ.60க்கு கிடைக்கும்.
மேலும் நேப்பியர் புல், பசுந்தீவன உற்பத்திக்கான விதைகள் பல்கலையின் விலைப்பட்டியல் படி விற்பனை செய்யப்படுகின்றன., என்றார். கூடுதல் விபரங்களுக்கு 98650 16174 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.