/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இரு நாட்கள் வாகன சோதனையில் ரூ.68.85 லட்சம் பறிமுதல்
/
இரு நாட்கள் வாகன சோதனையில் ரூ.68.85 லட்சம் பறிமுதல்
இரு நாட்கள் வாகன சோதனையில் ரூ.68.85 லட்சம் பறிமுதல்
இரு நாட்கள் வாகன சோதனையில் ரூ.68.85 லட்சம் பறிமுதல்
ADDED : ஏப் 11, 2024 06:39 AM
தேனி : தேனி மாவட்டத்தில் இரு நாட்கள் நடந்த வாகன சோதனையில் ரூ. 68.85 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தேனி லோக்சபாவில் தேர்தலில் வாக்காளர்களிடம் பணம், பரிசுப்பொருட்கள் வழங்குவதை தடுக்க சோதனை தீவிரப்படுத்தப்பட்டள்ளது. இதற்காக சட்டசபை தொகுதிகளில் தலா 9 பறக்கும்படை, நிலைக்குழு அமைத்து வாகன சோதனை செய்யப்படுகிறது. போடி விலக்கில் ஏ.டி.எம்., வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.63 லட்சம் பறிமுதல் செய்து சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
போடி தொகுதி பறக்கும்படை அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையிலான வாகன சோதனையில் சிந்தலசேரி மரியஜோன்ஸ் கார் ஆய்வு செய்தனர். ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 1.37 லட்சத்தை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
பெரியகுளத்தில் பறக்கும்படை அலுவலர் அழகர்ராஜா தலைமையிலான குழுவினர் ஆய்வில் வடபுதுப்பட்டி செந்தில் காரை ஆய்வு செய்தனர். அதில் ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 2.50 பறிமுதல் செய்து பெரியகுளம் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
தேனியில் பறக்கும் படை அலுவலர் ராஜமுருகன் சோதனையில் கம்பம் பிரபு, உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.50,810 பறிமுதல் செய்து பெரியகுளம் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
போடி தொகுதி அம்மச்சியாபுரத்தில் நிலைக்குழு அலுவலர் மணிகண்ட பிரசன்னா தலைமையில் அலுவலர்கள் சோதனை செய்தனர். அவ்வழியாக டூவீலரில் சென்ற ஊஞ்சாம்பட்டி பிரசாந்தை சோதனை செய்தனர் அவர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற பணம் ரூ. 62,450 பறிமுதல் செய்து, போடி கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
ஆண்டிப்பட்டி புள்ளிமான் கோம்மையில் மணிகண்டன் தலைமையிலான நிலைக்குழுவினர் சோதனை செய்து கொண்டிருந்தனர். அவ்வழியாக டூவீலரில் சென்ற மதுரை வாடிப்பட்டி அழகுபாண்டி என்பவரை சோதனை செய்தனர். அவரிடம் ஆவணங்கள் இன்றி கொண்ட செல்லப்பட்ட பணம் ரூ. 84,710 பறிமுதல் செய்து ஆண்டிப்பட்டி சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

