/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
78 மாணவர்கள் இரு கைகளில் சிலம்பம் சுற்றி சாதனை
/
78 மாணவர்கள் இரு கைகளில் சிலம்பம் சுற்றி சாதனை
ADDED : ஆக 19, 2024 01:03 AM

பெரியகுளம் : பெரியகுளத்தில் சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக 78 மாணவ, மாணவிகள் இரு கைகளிலும் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர்.
பெரியகுளம் வேலன் வாழும் கலைக்கூடம் அறக்கட்டளை, பெரியகுளம் ரோட்டரி சங்கம் சார்பில், 78 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக சிலம்பம் போட்டி அறிவுத்திருக்கோயில் வளாகத்தில் நடந்தது.
இதில் 78 மாணவ, மாணவிகள் இரு கைகளில் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர். பரிசளிப்பு விழாவில் ரோட்டரி சங்கப் பொருளாளர் டாக்டர் செல்வராஜ் தலைமை வகித்தார். தலைவர் சதக்கத்துல்லா முன்னிலை வகித்தார்.
ரோட்டரி சங்கம் முன்னாள் மாவட்டத் துணை கவர்னர் பாஸ்கரன், தென்கரை வாசகர் வட்டத் தலைவர் அன்புக்கரசன், உறுப்பினர் முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
சிலம்பப் பயிற்சியாளர் திருநாவுக்கரசு நன்றி தெரிவித்தார்.-

