sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

8 கால்நடை டாக்டர்கள் வனத்துறையில் நியமனம் தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலி

/

8 கால்நடை டாக்டர்கள் வனத்துறையில் நியமனம் தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலி

8 கால்நடை டாக்டர்கள் வனத்துறையில் நியமனம் தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலி

8 கால்நடை டாக்டர்கள் வனத்துறையில் நியமனம் தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலி


ADDED : மார் 09, 2025 02:47 AM

Google News

ADDED : மார் 09, 2025 02:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம்: வனத்துறையில் தேவைக்கு ஏற்ப கால்நடை டாக்டர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினமலர் நாளிதழில் வெளியான செய்தி எதிரொலியாக தற்போது 8 கால்நடை டாக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி முழுவதும் புலிகள் காப்பகமாக மாற்றப்பட்டுள்ளது. சத்தியமங்கலம், திருநெல்வேலி, ஸ்ரீவில்லிபுத்தூர், மேகமலை பகுதிகள் கேரளாவின் பெரியாறு புலிகள் காப்பகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

2020ல் ஸ்ரீவில்லிப்புத்தூர் மேக மலை புலிகள் காப்பகமாக மாற்றம் செய்து தேசிய புலிகள் பாதுகாப்பு முகமையின் நேரடி கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. மேகமலை இந்தியாவின் 51 வது புலிகள் காப்பகமாகவும், தமிழகத்தின் 5 வது புலிகள் காப்பகமாகவும் உள்ளது.

காப்பக பகுதியில் வேட்டைகளை தடுக்கும் நடவடிக்கை 90 சதவீதம் வெற்றி பெற்றுள்ளது. நோய் தாக்குதல், விலங்குகள் காயப்படுதல் உள்ளிட்டவைக்கு சிகிச்சையளிப்பது அவசியமாகும்.

ஒரு உயிரினம் இயற்கை மரணமடைந்தாலும், அதை உடற்கூராய்வு செய்து அடக்கம் செய்ய வேண்டும்.

இப்பணிகள் மேற்கொள்ள கால்நடை டாக்டர்கள் நியமிக்கவேண்டும். முதுமலையில் 4, கோவையில் 4, ஒசூரில் 2 என எல்லா இடங்களிலும் வனத்துறையில் கால்நடை டாக்டர்கள் உள்ளனர்.

மேகமலை காப்பகத்திற்கு மதுரையில் ஒரு டாக்டர் மட்டும் உள்ளார். மூன்று மாவட்டங்களுக்கும் அவர் கவனிக்க வேண்டும். வனப்பகுதியில் விலங்குகள் உடற்கூராய்வு, பிரச்னை என்றால் சம்பந்தப்பட்ட ஏரியாவில் உள்ள கால்நடை டாக்டர்களை உதவிக்கு அழைத்தனர்.

எனவே வன உயிரினங்களின் சிகிச்சை, ஆரோக்கியம் உள்ளிட்ட அம்சங்களை கருத்தில் கொண்டு, வனத்துறைக்கு தேவையான கால்நடை டாக்டர்களை நியமிக்க வேண்டும் என தினமலர் நாளிதழில் ஜனவரி 13 ல் செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் வனத்துறையில் பணியாற்ற 8 கால்நடை டாக்டர்களை அரசு நியமித்துள்ளது. சேலம் குறும்பபட்டி, ஸ்ரீவில்லிபுத்துார், மேகமலை புலிகள் காப்பகம், திண்டுக்கல்- கொடைக்கானல் சரணாலயம், திருச்சி ஆனைமலை புலிகள் காப்பகம், களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகம், வேலூர் ஆகிய ஊர்களுக்கு தலா ஒரு டாக்டர் வீதம் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இது தவிர கால்நடை ஆய்வாளர் 6 பேர், மற்றும் உதவியாளர்கள் 9 பேர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களும் கால்நடை பராமரிப்பு துறையிலிருந்து மாற்றுப் பணியாக அனுப்பப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us