/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
டூவீலர் பழுது நீக்கி தராமல் ஏமாற்றியவர் மீது வழக்கு
/
டூவீலர் பழுது நீக்கி தராமல் ஏமாற்றியவர் மீது வழக்கு
டூவீலர் பழுது நீக்கி தராமல் ஏமாற்றியவர் மீது வழக்கு
டூவீலர் பழுது நீக்கி தராமல் ஏமாற்றியவர் மீது வழக்கு
ADDED : ஆக 07, 2024 05:28 AM
தேனி : டூவீலரை பழுது நீக்கி தராமல் ஏமாற்றி, கொலை மிரட்டல் விடுத்த மெக்கானிக் ஒலி மீது, தேனி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
மதுரை மாவட்டம் பொதும்பு ஆவின் நகரை சேர்ந்த கூலித் தொழிலாளி சரவணக்குமார் 28. இவர் கடந்த மே 12 ல் தனது டூவீலரில் மனைவியுடன் வீரபாண்டி திருவிழாவிற்கு வந்தார். அப்போது டூவீலர் பழுதடைந்தது. உடனே சின்னமனுாரை சேர்ந்த நண்பர்கள் முத்துக்குமார், குபேந்திரனுக்கு தகவல் அளித்தார்.
அவர்கள் கூறியதால் அல்லிநகரம் தியேட்டர் தெரு மெக்கானிக் ஒலிக்கு அலைபேசியில் அழைத்து, தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் வந்து டூவீலரை பழுது பார்த்து தரும் படி கூறினார்.
அன்றைய தினம் ரூ.ஆயிரம், மறுநாள் ரூ.3 ஆயிரம் கொடுத்து டூவீலரை சீரமைத்து தருமாறு கூறினார். பின் பலமுறை டூவீலரை கேட்டவரிடம், ரூ.60 ஆயிரம் கொடுத்தால் டூவீலரை தருவேன், மீறிக்கேட்டால் வண்டி காணாமல் போய்விடும் என, கூறி கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள டூவீலரை மீட்டு, ஒலி மீது நடவடிக்கை எடுக்க சரவணக்குமார், தேனி எஸ்.பி., சிவபிரசாத்திடம் புகார் அளித்தார். எஸ்.பி., உத்தரவில் தேனி எஸ்.ஐ., முருகேசன் ஒலி மீது மோசடி, கொலை மிரட்டல் வழக்குப்பதிந்து விசாரிககின்றார்.