/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.72.87 லட்சம் மோசடி மூவர் மீது வழக்கு
/
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.72.87 லட்சம் மோசடி மூவர் மீது வழக்கு
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.72.87 லட்சம் மோசடி மூவர் மீது வழக்கு
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.72.87 லட்சம் மோசடி மூவர் மீது வழக்கு
ADDED : செப் 14, 2024 10:59 PM
தேனி:வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ஸ்ரீராம் 'அப்ராடு கன்சல்டன்சி' நிறுவன ஊழியர் சுமங்கலிபிரியாவிடம் ரூ.72.87 மோசடி செய்த நிறுவன உரிமையாளர் ராமலிங்கம், இவரது மனைவி மகேஸ்வரி, இவர்களது நண்பர் முகமது அசாரூதீன் மீது தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர்.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம் ராமலிங்கம், இவரது மனைவி மகேஸ்வரி இணைந்து தேனி மாவட்டம், போடியில் ஸ்ரீராம் 'அப்ராடு கன்சல்டன்சி' என்ற நிறுவனம் நடத்தினர். இந்நிறுவனத்தில் உத்தமபாளையம் சுருளிபட்டியை சேர்ந்த சுமங்கலி பிரியா பணிபுரிந்தார். இந் நிறுவனம் மூலம் 25 பேரை கத்தார் நாட்டிற்கு வேலைக்கு அனுப்பினர். ராமலிங்கம் கத்தாரில் நடத்தி வரும் நிறுவனத்தில் பங்கு தாரராக சேர்க்க ரூ.50 லட்சமும், உறவினர்களுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தர ரூ. 17.60 லட்சம் சுமங்கலி பிரியாவிடம் கேட்டார். இதை நம்பி சுமங்கலிபிரியா வங்கி கணக்கு மூலம் ரூ. 35.60 லட்சத்தை நிறுவன உரிமையாளர்களுக்கு அனுப்பினார்.
இந்நிலையில் ராமலிங்கம் நண்பர் தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை இப்ராஹிம் நகர் முகமது அசாரூதீன் அலைபேசியில் சுமங்கலி பிரியாவிடம், கத்தார் வங்கியில் ராமலிங்கம் ரூ.7 கோடி கடன் கேட்டுள்ளார். அதற்கு ரூ. ஒரு கோடி டெபாசிட் செய்ய வேண்டும். நாங்கள் ரூ.80 லட்சம் கொடுத்துள்ளோம். மேலும் ரூ. 20 லட்சம் வழங்கினால், இதுவரை வாங்கிய மொத்த பணத்தையும் திருப்பி அளிப்பதாக கூறினார். இதனை நம்பி ரூ. 16.61 லட்சத்தை முகமது அசாரூதீன் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பினார்.
இந்நிலையில் இருவருக்கு குவைத் வீசா வாங்கி தருவதாக கூறி முகமது அசாரூதீன் ரூ.3.06 லட்சம் வாங்கி, போலி விசா வழங்கினார். மொத்தம் ரூ.72.87 லட்சத்தை இழந்த சுமங்கலி பிரியா பணத்தை ராமலிங்கம், மகேஸ்வரியிடம் கேட்டார்.
இருவரும் அசிங்கமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். தேனி மாவட்ட குற்றபிரிவு போலீசார் ராமலிங்கம், மகேஸ்வரி, முகமது அசாரூதீன் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.