ADDED : ஆக 03, 2024 05:22 AM

தேனி: தேனியில் மாவட்ட காங்கிரஸ் கட்சி செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டமும், மாற்று கட்சியினர் இணைப்பு விழாவும் நடந்தது.
கூட்டத்தில் மாவட்டத் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். பொருளாளர் பாலசுப்பிரமணியன், நிர்வாகி டாக்டர் தியாகராஜன், துணைத் தலைவர் சன்னாசி, மாநில பொதுக்குழு உறுப்பினர் முனியாண்டி முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, அகில இந்திய காங்., கமிட்டியின் செயலாளர் டாக்டர் ஸ்ரீவல்லபிரசாத், சட்டசபை காங்., கட்சித் தலைவர் ராஜேஷ்குமார், மாநில செய்தி தொடர்பாளர் வேலுச்சாமி, காங்., கட்சியின் சட்டசபை கொறடா ஹசன்மவுலானா, மாநில காங். கட்சியின் பொதுச் செயலாளர் செல்வம், மாநில பொதுக்குழு உறுப்பினர் மூர்த்தி, அமைப்புச் செயலாளர் ராம்மோகன், மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின்பிரசாந்த் ஆகியோர் பங்கேற்றனர். நகரத் தலைவர் கோபிநாத் வரவேற்றார். நகரத் தலைவர்கள் கனகசீதாமுரளி. முசாக்மந்திரி, போஸ், ஜெயப்பிரகாஷ், பழனிமுத்து, வட்டாரத் தலைவர்கள் ஹம்சாமுகமது, ஜம்பு சுதாகர், ராஜாமுகமது, சத்தியமூர்த்தி, கடமலைக்குண்டு - மயிலாடும்பாறை, ராஜேஸ்கண்ணன், ஜீவா, மாவட்ட வர்த்தக காங்., தலைவர் சங்கரநாராயணன், மாநில நில வணிகர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அப்துல்நாசர், மாநில பொதுச் செயலாளர் சுபாஷ், மாநில பொருளாளர் ரஹிம், வர்த்தக காங்., மாநிலச் செயலாளர் மனோகரன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர். தேனி வட்டாரத் தலைவர் முருகன் நன்றி தெரிவித்தார்.