ADDED : மார் 25, 2024 05:53 AM
மூணாறு, : இடுக்கி மாவட்டம் கட்டப்பனை அருகே கேரள அரசு பஸ், கார் நேருக்கு, நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஐந்து வயது சிறுமி இறந்தார்.
கம்பம்மெட்டைச் சேர்ந்த எபி குடும்பத்தினருடன் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவர்களின் புனித ஸ்தலமான மலையாற்றுக்கு காரில் புனித யாத்திரை சென்றார். எபி காரை ஓட்டினார். மலையாற்றுரில் வழிபாட்டை முடித்து விட்டு திரும்புகையில் வீட்டில் இருந்து ஆறு கி.மீ., தொலைவில் கட்டப்பனை அருகே சோற்றுகுழி பகுதியில் நேற்று காலை 7:00 மணிக்கு கார் வந்தபோது எதிரே வந்த கேரள அரசு பஸ் மோதியது. எபி 33,அவரது மனைவி அமல 31, மகள் ஆமிஎல்சா 5, மகன் ஐடன் 2, எபியின் பெற்றோர் ஜோசப்வர்க்கி 63, மோளி 58, ஆகியோர் பலத்த காயமடைந்தனர். ஆமிஎல்சா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். எஞ்சியவர்கள் கட்டப்பனை, பாலா ஆகிய பகுதிகளில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

