ADDED : மே 24, 2024 03:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவாரம்: தேவாரம் அருகே டி.மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் அழகுமலை 53. இவர் டாஸ்மாக் கடைக்கு மது பாட்டில் வாங்க சென்றுள்ளார்.
இவரிடம் அங்கு நின்று இருந்த மூனாண்டிபட்டியை சேர்ந்த சிவசூர்யா 20, குடிக்க பணம் கேட்டுள்ளார். பணம் இல்லை என கூறி உள்ளார். ஆத்திரம் அடைந்த சிவசூர்யா கீழே கிடந்த பாட்டிலை உடைத்து குத்தி கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார். அழகுமலை புகாரில் தேவாரம் போலீசார் சிவசூர்யாவை கைது செய்து விசாரிக்கின்றனர்.