/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வேட்பு மனுவை வீட்டில் வைத்துவிட்டு மனுதாக்கல் செய்ய வந்த நபர்
/
வேட்பு மனுவை வீட்டில் வைத்துவிட்டு மனுதாக்கல் செய்ய வந்த நபர்
வேட்பு மனுவை வீட்டில் வைத்துவிட்டு மனுதாக்கல் செய்ய வந்த நபர்
வேட்பு மனுவை வீட்டில் வைத்துவிட்டு மனுதாக்கல் செய்ய வந்த நபர்
ADDED : மார் 23, 2024 05:59 AM

தேனி: தேனி லோக்சபா தொகுதியில் போட்டியிட மனுத்தாக்கல் செய்ய வந்த கூழையனுாரை சேர்ந்த மணிகண்டன் என்பவர் வேட்புமனு இன்றி வந்தாதால் திருப்பி அனுப்பப்பட்டார்.
லோக்சபா தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுத்தாக்கல் மார்ச் 20ல் துவங்கியது. மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 27 என அறிவிக்கப்பட்டுள்ளது. தேனி கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனுத்தாக்கலுக்கு ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது. தேர்தலில் போட்டியிட விரும்பும் பலர் வேட்புமனுக்களை வாங்கி செல்கின்றனர்.
இந்நிலையில் வேட்புமனுத்தாக்கல் துவங்கிய இருநாட்களாக யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை. நேற்று மதியம் 1:10 மணிக்கு கூழையனுார் நடுத்தெருவை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் மணிகண்டன் 45, வேட்பு மனு தாக்கலுக்கு வந்தார். வேட்பு மனுவிற்கான கட்டணம், வேட்பு மனுவை முன்மொழிய வாக்களர்கள் 4 பேருடன் வந்தார். தேர்தல் பிரிவு அலுவலர்கள் அவர் கொண்டு வந்த விண்ணப்பங்கள், உறுதிமொழிப்படிவத்தை சரிபார்த்தனர். அவரிடம் வேட்பு மனு எங்கே என அலுவலர்கள் கேட்ட போது வேட்பு மனுவை மறந்து வீட்டில் வைத்து விட்டு வந்ததாக பரிதாபமாக தெரிவித்தார். வேட்புமனுவுடன் வருமாறு அவரை அதிகாரிகள் திருப்பி அனுப்பினர்.தேனி தொகுதியில் இதுவரை வேட்பாளர்கள் யாரும் வேட்புமனுத்தாக்கல் செய்யவில்லை.நேற்று வந்த ஒருவரும் வேட்புமனு இன்றி மனுத்தாக்கலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

