/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனியில் 3 பெண்களை கடித்து குதறிய வெறிநாய்
/
தேனியில் 3 பெண்களை கடித்து குதறிய வெறிநாய்
ADDED : மே 04, 2024 05:52 AM
தேனி: தேனி அல்லிநகரம் நகராட்சி 20வது வார்டில் தெருநாய்கள் 3 பெண்களை கடித்து குதறியதால், அவர்கள் தேனி அரசு மருத்துவக்கல்லுாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தேனி கே.ஆர்.ஆர்., நகரில் நேற்று முன்தினம் மாலை குப்பை கொட்ட சென்ற பெண்ணின் காலில் வெறி நாய் கடித்து குதறியது. இதே நாய் எம்.ஜி.ஆர்., நகர் கம்பம் நடராஜன் தெருவை சேர்ந்த பொட்டியம்மாள் 60, அதேதெருவை சேர்ந்த ஜோதியம்மாள் 60 என்ற மூதாட்டியையும் கடித்துள்ளது. வெறிநாய் கடித்ததால் தடுப்பூசி செலுத்தி வீடு திரும்பினர். கடந்த 5 நாட்களுக்கு முன் அதேப்பகுதியை சேர்ந்த பேச்சியம்மாள் 59 , பெண்ணையும் வெறிநாய் கடித்து காயம் அடைந்துள்ளார். இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். நகராட்சி நிர்வாகம் வெறிநாயை பிடிக்க வேண்டும் என புகார் தெரிவித்துள்ளனர்.