ADDED : ஜூன் 27, 2024 04:59 AM
தேனி, : தேனி பாரஸ்ட் ரோடு 5வது தெரு வாசிமலை 30. இவர் தனது மனைவி தமிழ்செல்வி, குழந்தையுடன் தனது வீட்டில் ஜூன் 26ல் அதிகாலை 4:00 மணிக்கு துாங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது யாரோ வீட்டின் கதவை திறக்க முயற்சிக்கும் சத்தம் கேட்டது. கதவை திறந்த போது 25 வயது மதிக்கத்தக்க டிஷாட் அணிந்த வாலிபர் ஓடிவிட்டார். அருகில் இருந்த வீடுகளிலும் அந்த நபர் நள்ளிரவு, அதிகாலை நேரங்களில் வீட்டுக்கதவை திறக்க முயற்சித்தது தெரிந்தது. பின் அதேநாள் காலை 6:00 மணிக்கு டிஷாட் அணிந்த வாலிபர் பங்களாமேட்டில் நின்றிருந்தார்.
அவரை பிடித்து விசாரித்த போது, அவர் தேனி பங்களாமேடு குயவர்பாளையம் ஆனந்தவிஜீ 25, என தெரியவந்தது. அவரை தேனி போலீஸ் எஸ்.ஐ., ஜீவானந்தத்திடம் பாதிக்கப்பட்டவர்கள் ஒப்படைத்தனர்.போலீசார் அவரை கைது செய்தனர். இவர் மீது ஐந்து திருட்டு வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.