/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ரோட்டில் செல்வோரை அச்சுறுத்தும் 'சைலன்சர்' மாற்றபட்ட டூவீலர்கள் நெரிசலான ரோட்டில் நடக்கும் டூவீலர் ரேஸ்

ADDED : செப் 10, 2024 06:09 AM
தேனி: தேனியில் டூவீலர்களில் பல்வேறு மாற்றங்கள் செய்து 'மாடிபைடு' டூவீலர்கள் ஏராளமாக இயக்கப்படுகின்றன. இதிலிருந்து வரும் அதிக சத்தத்தால் பாதசாரிகள், மற்ற டூவீலர்களில் செல்வோர் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
நகரில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், இளைஞர்கள் அதிக மோட்டார் திறன் கொண்ட டூவீலர்களை இயக்குகின்றனர். அதிலும் சிலர் வாகனங்களில் அதிக ஒலி எழுப்ப வேண்டும் என்ற ஆசையில் விதவிதமான ஒலி எழுப்பும் ஹாரன்கள் பொருத்துகின்றனர்.
ஆனால் சிலர் சைலன்சர்களில் இருந்து அதிக சத்தம் வருவதுபோல் மாற்றம் செய்து 'மாடிபைடு' டூவீலர்களாக இயக்குகின்றனர். இவ்வகை டூவீலர்கள் அதிக சத்தத்துடன் விரைவாக ஓட்டி செல்கின்றனர்.
இதனால் ரோட்டில் செல்லும் மற்ற வாகன ஓட்டிகள், டூவீலரில் செல்வோர் பதட்டமடைந்து விபத்திற்குள்ளாகும் வாய்ப்பு உள்ளது. பெரியகுளம் ரோட்டில் சிலர் அடிக்கடி மக்கள் அதிக நடமாட்டம் உள்ள நேரங்களில் டூவீலர் ரேஸ் விடுவதும் தொடர்கிறது.
தேனி நகர்பகுதி, பழனி செட்டிபட்டி பகுதிகளில் உள்ள சில டூவீலர் மெக்கானிக் கடைகளில் லைசன்சர்களில் இருந்த அதிக அளவு சத்தம் வரும் வகையில் மாற்றம் செய்து தருவதாக இளைஞர்கள் கூறுகின்றனர்.
பொதுமக்கள் பாதிக்கும் வகையில் அதிக சத்ததுடன் டூவீலர் ஓட்டுபவர்கள், தடைசெய்யப்பட்ட ஹாரன் பயன்படுத்துபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.