நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: கண்டமனூர் அருகே கோவிந்தநகரத்தை சேர்ந்தவர் மணிகண்டன் 47, கேரளாவில் குமுளி அருகே சக்கு பள்ளம் என்ற இடத்தில் இரு ஆண்டுகளாக தங்கி வேலை பார்த்து வருகிறார்.
உறவினர் வீட்டில் விசேஷத்திற்காக குடும்பத்துடன் சொந்த ஊரான கோவிந்தநகரம் சென்றுள்ளார்.
சில நாட்களுக்கு முன் மணிகண்டனின் இளைய மகள் பாண்டீஸ்வரி கடைக்கு செல்வதாக சென்றவர் திரும்ப வரவில்லை.
பல இடங்களில் தேடியும் ஒரு தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மணிகண்டன் புகாரில் கண்டமனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.