/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சிறப்பு கிராம சபை கூட்டம் ஜூலை 2க்கு ஒத்திவைப்பு பயனாளிகள் தேர்வில் குழப்பம்
/
சிறப்பு கிராம சபை கூட்டம் ஜூலை 2க்கு ஒத்திவைப்பு பயனாளிகள் தேர்வில் குழப்பம்
சிறப்பு கிராம சபை கூட்டம் ஜூலை 2க்கு ஒத்திவைப்பு பயனாளிகள் தேர்வில் குழப்பம்
சிறப்பு கிராம சபை கூட்டம் ஜூலை 2க்கு ஒத்திவைப்பு பயனாளிகள் தேர்வில் குழப்பம்
ADDED : ஜூன் 30, 2024 04:52 AM
தேனி, : கனவு இல்ல திட்டத்திற்காக இன்று (ஜூன்30) நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த சிறப்பு கிராம சபை கூட்டம் ஜூலை 2க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
பயனாளிகள் தேர்வில் தெளிவான வழிகாட்டுதல் இல்லாததால் ஊராட்சி தலைவர்கள், செயலாளர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.தமிழகத்தில் குடிசை இல்லாத மாநிலமாக மாற்ற மாநில அரசு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி 2030க்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டில் ஒருலட்சம் வீடுகள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் படி 360 சதுர அடியில் கான்கிரீட் வீடுகள் அமைக்க அரசு சார்பில் ரூ.3.50 லட்சம் மானியம் வழங்கப்பட உள்ளது.
இதற்காக சிலமாதங்களுக்கு முன் சர்வே பணி நிறைவடைந்தது. அப்போது கூரை வீடுகள், ஓட்டு வீடுகள், தகர வீடுகள் என அனைத்தும் கணக்கிடப்பட்டது.
ஆனால் பயனாளிகள் தேர்விற்காக மீண்டும் சர்வே பணி தொடர்ந்து நடக்கிறது.
அதிகாரிகள் கூறுகையில், மாவட்டத்திற்கு 634 பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்காக கூடுதலாக 126 பேர் வரை தேர்வு செய்து வைக்க உள்ளோம். பயனாளர்கள் தேர்வு தொடர்பாக ஜூன் 30 நடக்க இருந்த சிறப்பு கிராம சபை கூட்டம், ஜூலை 2 ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது என்றனர்.
ஊராட்சி செயலாளர்கள் கூறுகையில்,
முன்னர் ஓட்டு வீடுகள், தகர வீடுகள் என அணைத்தையும் கணக்கெடுக்க கூறினர். ஆனால் தற்போது மண் சுவரிலான வீடுகள் மட்டும் தான் கணக்கெடுக்க கூறுகின்றனர்.
மண் சுவர்கள் மட்டும் அமைக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை மிக குறைவு. இத்திட்டம் தொடர்பாக ஊராட்சி தலைவர்கள், செயலாளர்களுக்கு உரிய வழிகாட்டுதல் இல்லை. இதனால் பயனாளர்கள் தேர்வு செய்வதில் குழப்பமாக உள்ளது என்றனர்.