ADDED : ஜூலை 05, 2024 05:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்: கடந்த சில நாட்களாக பெய்த கன மழையால் முல்லைப் பெரியாற்றில் கலங்கிய நிலையில் தண்ணீர் ஓடுகிறது. ஆற்றில் இருந்து நேரடியாக குடிநீர் பம்பிங் செய்து சப்ளை செய்யும் கிராமங்களில் தொற்றுநோய் பரவும் வாய்ப்புள்ளது.
வட்டார மருத்துவ அலுவலர் முருகன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி பகுதியில் தண்ணீர் தேக்கி வைக்கப்படும் தொட்டிகள், குடிநீர் சப்ளையாகும் வீடுகளில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் குளோரினேசன் முறையாக செய்து சப்ளை செய்யவும், கலங்கிய நிலையில் உள்ள குடிநீரை காய்ச்சி குடிக்கவும் அறிவுறுத்தினர்.