ADDED : ஆக 30, 2024 05:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி மாவட்ட ஆட்டோ மற்றும் மோட்டார் தொழிலாளர் சங்கம் (ஏ.ஐ.டி.யு.சி.,) சார்பில், புதிய மோட்டார் வாகன திருத்தச் சட்டம், மூன்று குற்றவியல் திருத்தச் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், தேனி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் இடைத்தரகர்களை வைத்து முறைகேடுகளில் லஞ்சம் பெறும் அதிகாரிகள் மீது நடவடிககை எடுக்க வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டச் செயலாளர் பாண்டி தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் ராஜ்குமார், மாவட்டச் செயலாளர்கள் ஞானவேல், உதயசூரியன், இந்திய கம்யூ., தேனி தாலுகா செயலாளர் அரசகுமாரன் ஆகியோர் பங்கேற்றனர்.