/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அமித்ஷா தேனி வருகை ரத்து; அ.ம.மு.க., பா.ஜ., 'அப்செட்'
/
அமித்ஷா தேனி வருகை ரத்து; அ.ம.மு.க., பா.ஜ., 'அப்செட்'
அமித்ஷா தேனி வருகை ரத்து; அ.ம.மு.க., பா.ஜ., 'அப்செட்'
அமித்ஷா தேனி வருகை ரத்து; அ.ம.மு.க., பா.ஜ., 'அப்செட்'
ADDED : ஏப் 04, 2024 11:49 PM
கம்பம் : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை திடீரென ரத்து செய்யப்பட்டதால் அ.ம.மு.க.,பா.ஜ., நிர்வாகிகள் அப்செட்டாகி உள்ளனர்.
தேனி லோக்சபா தொகுதியில் பிரசாரம் களை கட்டுகிறது. தி.மு.க. அ.தி.மு.க. அ.ம.மு.க. என மூன்று கட்சிகளுமே முழு வேகத்தில் களமிறங்கி உள்ளனர்.தி.மு.க. அ.தி.மு.க. இப்போதே நிர்வாகிகளை கவனித்து முறுக்கேற்றியுள்ளது.
இந்நிலையில் நேற்று தேனிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருவதாக அறிவிக்கப்பட்டு
'ஹெலிபேட்' தயாரானது. பாதுகாப்பு அம்சங்கள் கடைப்பிடிக்க துவங்கினர். ஆனால் அவரது வருகை திடீரென ரத்தாகி உள்ளது.
இந்த அறிவிப்பு அ.ம.மு.க. மற்றும் பா.ஜ., தொண்டர்களையும் அப்செட்டாக்கி உள்ளது. வருகை ரத்து ஏன் என்று பா.ஜ. நிர்வாகிகள் சிலரிடம் கேட்டதற்கு, பா.ஜ. கூட்டணியில் பல கட்சிகள், தலைவர்கள் போட்டியிடுகின்றனர். ஓ.பி.எஸ்.. ஏ.சி. சண்முகம், ஜான்பாண்டியன உள்ளிட் டோரும் போட்டியிடுகின்றனர்.
தேனி வந்து சென்றால் பிற தலைவர்கள் தொகுதிக்கும் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும். அவரது உடல் நிலை சரியில்லை என்பதால் அவரது வருகை ரத்தானது. அவருக்கு பதில் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் ஏப். 8 ல் தேனி வர உள்ளார் என்றார்.

