ADDED : பிப் 27, 2025 01:22 AM

தேனி; கஞ்சா வழக்குகளில் ஆந்திரா குற்றவாளிகளை பிடிக்க உத்தமபாளையம் டி.எஸ்.பி., தலைமையில் கம்பம் வடக்கு இன்ஸ்பெக்டர் பார்த்திபன், எஸ்.ஐ.,கள் கதிரேசன்,மணிகண்டன், இளையராஜா ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து எஸ்.பி., சிவபிரசாத் உத்தரவிட்டார். தனிப்படையினர்பிப்.12ல்ஆந்திரா சென்று கஞ்சா வழக்கில் தொடர்புடைய தலைமறைவான மூவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கம்பம் தெற்கு போலீசில் 12 கிலோ கஞ்சா, கூடலுார் வடக்கு போலீசில் 22 கிலோ கஞ்சா கடத்தல், தேவதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் பகுதியில் 21 கிலோகஞ்சா கடத்திய மூன்று வழக்குகள் பதிவாகின. இதில் தொடர்புடைய ஆந்திரா பல்நாடு மாவட்டம் சிலக்கல்லுாரிபேட்டை சுரவரிபள்ளத்தை சேர்ந்த சேக்மகபுசுபானியை தனிப்படை போலீசார் 33, கைது செய்தனர். கைதிகள் பரிமாற்ற வாரண்ட் மூலம் தேனி மாவட்டத்திற்கு அவரை கொண்டு வந்து,கூடலுாரில் விசாரித்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

