/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கல்லுாரியில் ரத்த சோகை கண்டறியும் முகாம்
/
கல்லுாரியில் ரத்த சோகை கண்டறியும் முகாம்
ADDED : மார் 22, 2024 05:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: போடி அரசு பொறியியல் கல்லுாரி என்.எஸ்.எஸ்., திட்டம், டொம்புச்சேரி வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், ரத்தசோகை முகாம் கல்லுாரியில் இரண்டு நாட்கள் நடந்தது.
முதல்வர் வசந்தநாயகி முகாமை துவக்கி வைத்தார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் தமிழ்மாறன் ஒருங்கிணைத்தார்.
டாக்டர் வினோத்குமார், டாக்டர் ரூபாகாளீஸ்வரி, பல் டாக்டர் சிவபிரபு ஆகியோர் கல்லுாரி முதல், 2ம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு ரத்த பரிசோதனை செய்து, ஆலோசனை வழங்கினர். அனைத்துத்துறை பேராசிரியர்கள், ஆய்வு உதவியாளர்கள் பங்கேற்றனர்.

