/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போதை ஒழிப்பு ஊர்வலம்; விழிப்புணர்வு கருத்தரங்கு
/
போதை ஒழிப்பு ஊர்வலம்; விழிப்புணர்வு கருத்தரங்கு
ADDED : ஜூலை 06, 2024 05:52 AM
உத்தமபாளையம் : உத்தமபாளையம் எஸ்.ஏ.பி. மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. பள்ளியின் தாளாளர் கண்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார்.
முதல்வர் ஜியாவுல் ஹக் கலந்து கொண்டார். ஊர்வலத்தில் 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் போதை ஒழிப்பு வாசகங்கள் அடங்கிய பேனர்களை பிடித்து போதை ஒழிப்பு கோஷங்களை எழுப்பி சென்றனர். பைபாஸ் ரோட்டில் துவங்கிய ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பள்ளியை சென்றடைந்தது.
பின்னர் போதை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
போதை பழக்கத்தால் உடல் ஆரோக்கியம் கெடுவதுடன், வாழ்க்கை எவ்வாறு பாழ் படும் என்று ஆசிரியர்கள் விளக்கி பேசினார்கள்.
விழிப்புணர்வு கருத்தரங்கம்
போடி: கொட்டகுடி மலைக் கிராமத்தில் ஏ.எச்.எம். டிரஸ்ட், நல்லோர் வட்டம், அன்பின் ஆலய அறக்கட்டளை சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம், கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
நல்லோர் வட்டம் அமைப்பாளர் குறிஞ்சிமணி தலைமை வகித்தார். அன்பின் ஆலய அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் காளிமுத்து முன்னிலை வகித்தார்.
ஏ.எச்.எம்., டிரஸ்ட் கலைக் குழுவினர் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஏராளமான மலைக் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.