ADDED : ஆக 01, 2024 05:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பேரூராட்சி கூட்டம் பேரூராட்சி தலைவர் சந்திரகலா தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் ஜோதி, செயல் அலுவலர் ஆளவந்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வார்டு பகுதிகளில் குழாய் சீரமைப்பு, புதிய குழாய் இணைப்பு ஆகிய பணிகள் மேற்கொள்ளும் போது கவுன்சிலர் கவனத்திற்கு கொண்டு சென்று பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.