/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இலவச 'டேலி' பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
/
இலவச 'டேலி' பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : ஏப் 01, 2024 11:58 PM
தேனி : தேனி கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் கணினி மயமாக்கப்பட்ட 'டேலி' இலவச பயிற்சி வகுப்பு ஏப்.,15ல் துவங்க உள்ளது.
இதில் 18 வயது நிரம்பிய கிராமபுற ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி மே 20 வரை காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை நடைபெறும். பயிற்சியில் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சியில் தேர்ச்சி பெறுவோருக்கு சான்றிதழ், தொழில் துவங்க வங்கி கடன் ஆலோசனை வழங்கப்படும். பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் ஏப்.,15க்கு முன் தேனி தாலுகா அலுவலகம் எதிரே இயங்கும் கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். என பயிற்சி நிலைய இயக்குனர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் விபரங்களுக்கு 95003 14193 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

