/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தங்கும் விடுதிக்கு மாணவிகளிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்பு
/
தங்கும் விடுதிக்கு மாணவிகளிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்பு
தங்கும் விடுதிக்கு மாணவிகளிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்பு
தங்கும் விடுதிக்கு மாணவிகளிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்பு
ADDED : மே 02, 2024 05:53 AM
மூணாறு: தேவிகுளம் ஒன்றியத்திற்கு கீழ், மூணாறில் மாணவிகளுக்கான 'பிரீ மெட்ரிக் ஹாஸ்டல்' செயல்படுகிறது. அதில் 2024- -- 2025 கல்வியாண்டில் மாணவிகள் தங்கி படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அது தொடர்பாக தேவிகுளம் ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி பாபு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நடப்பு கல்வியாண்டில் 5ம் வகுப்புக்கு மேல் தேர்வில் வெற்றி பெற்றவர்கள், தங்கும் விடுதியில் இருந்து 8 கி.மீ., தொலைவுக்கு அப்பால் வசிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். அவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கிடைக்காத பட்சத்தில் தங்கும் விடுதியில் இருந்து 8 கி.மீ., சுற்றளவில் வசிப்பவர்களிடம் இருந்தும், ஆதிதிராவிடர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வராதபட்சத்தில் பிற பிரிவினரிடம் (10 சதவிகிதம்) இருந்தும் விண்ணப்பங்கள் ஏற்கப்படும்.
தகுதியுடைய மாணவிகள் ஜாதி, வருமானம் ஆகிய சான்றிதழ்கள், கடந்தாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண், பிறந்த தேதி, தற்போது படிக்கும் வகுப்பு ஆகியவை குறித்து சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் வழங்கும் சான்றிதழுடன் மே 15 மாலை 5:00 மணிக்குள் தேவிகுளம் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் விண்ணப்பங்கள் வழங்க வேண்டும். விண்ணப்ப படிவங்கள் அலுவலகத்தில் பெறலாம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

