/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆடை உற்பத்தி, சலவையகம் அமைக்க விண்ணப்பிக்கலாம்
/
ஆடை உற்பத்தி, சலவையகம் அமைக்க விண்ணப்பிக்கலாம்
ADDED : ஆக 07, 2024 05:40 AM
தேனி : மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர், சிறுபான்மையினர் பொருளாதார முன்னேற்றத்திற்காக ஆயுத்த ஆடையக உற்பத்தி அலகு அமைக்க தமிழக அரசு புதிய திட்டம் செயல்படுத்துகிறது.
இந்த திட்டத்தில் ஆயத்த ஆடையக உற்பத்தி, நவீன சலவையகம் அமைக்க தேவையான இயந்திரங்கள், மூலப்பொருட்கள் வாங்க ரூ.3 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் விண்ணப்பிக்க 10 நபர்கள் குழுவாக செயல்பட வேண்டும். குழு உறுப்பினர்களின் ஆண்டு வருமானம் ஆண்டிற்கு ரூ.ஒரு லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். பயன்பெற விரும்புபவர்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அலுவலகத்தை அணுகுமாறு கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.