/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முன் விரோதத்தில் தாக்கிய இருவர் கைது
/
முன் விரோதத்தில் தாக்கிய இருவர் கைது
ADDED : ஆக 03, 2024 05:11 AM
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஒன்றியம் ஜக்கம்மாள்பட்டியை சேர்ந்தவர் சமயமுருகன். இவருக்கும் இதே ஊரைச் சேர்ந்த செல்வீஸ்வரி, மாரியம்மாள் ஆகியோருக்கும் இடப்பிரச்சினையால் முன்விரோதம் இருந்துள்ளது.
நேற்று முன் தினம் ஜக்கம்மாள்பட்டி பழைய அரசு பள்ளி அருகே சமயமுருகன் தனது சித்தப்பா சங்கிலி முருகன் என்பவருடன் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஆட்டோவில் வந்த உசிலம்பட்டியை சேர்ந்த நல்லயன், ராஜ்குமார், திருப்பூரைச் சேர்ந்த சேகர் ஆண்டிபட்டி சமத்துவபுரத்தைச் சேர்ந்த தங்கம், மதுரை பைக்காராவை சேர்ந்த ஜெயபாண்டி ஆகியோர் சமய முருகனை தாக்கி உள்ளனர்.
விலக்கி விடச்சென்ற அவரது சித்தப்பா சங்கிலி முருகனையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். காயமடைந்த இருவரும் ராஜதானி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சைக்குப் பின் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
சமய முருகன் புகாரில் உசிலம்பட்டியை சேர்ந்த நல்லையன், திருப்பூரைச் சேர்ந்த சேகர் ஆகியோரை கைது ராஜதானி போலீசார் விசாரிக்கின்றனர்.