/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
'செக்'திருப்பித் தர கேட்டவர் மீது தாக்குதல்
/
'செக்'திருப்பித் தர கேட்டவர் மீது தாக்குதல்
ADDED : மே 25, 2024 03:56 AM
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி சக்கம்பட்டியை சேர்ந்தவர் அய்யனார் 64, ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார்.
வியாபாரத்திற்காக இதே ஊரைச் சேர்ந்த லீலாவதி 65, என்பவரிடம் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ரூ.5 லட்சம் கடனாக பெற்றுள்ளார். இதற்கு ஈடாக அய்யனார் தனது கையொப்பம் இட்ட இரண்டு 'செக்' லீப்களை லீலாவதியிடம் கொடுத்துள்ளார்.
கடந்த 7.6.2023ல் அய்யனார் தான் வாங்கிய பணத்தை ஊர் பெரியவர் முன்னிலையில் லீலாவதியிடம் கொடுத்துள்ளார்.
பணத்திற்கு ஈடாக அய்யனார் கையொப்பத்துடன் கொடுத்த 'செக்' லீப்களை லீலாவதி திரும்ப கொடுக்காததுடன் அவர் மீது கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்துள்ளார்.
இதுகுறித்து அய்யனார் கேட்டபோது, அவரை லீலாவதி அசிங்கமாக பேசியதுடன் கையால் அடித்து காயம் ஏற்படுத்தினார்.
அய்யனார் புகாரில் ஆண்டிபட்டி போலீசார் லீலாவதி மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

