/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சட்டசபை வாரியாக ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்க தனி அறை
/
சட்டசபை வாரியாக ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்க தனி அறை
சட்டசபை வாரியாக ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்க தனி அறை
சட்டசபை வாரியாக ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்க தனி அறை
ADDED : ஆக 08, 2024 05:35 AM
தேனி: கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மின்னனு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கும் அறையில் சட்டசபை தொகுதி வாரியாக இயந்திரங்களை பாதுகாத்து வைக்க அறைகள் அமைக்கும் பணி துவங்கியது.
அனைத்து மாவட்டங்களிலும் மின்னனு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைப்பதற்காக பாதுகாப்பு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்குள்ள இயந்திரங்களை சட்டசபை தொகுதி வாரியாக அலுமினியத்தால் செய்யப்பட்ட பொருட்களை கொண்டு அறை அமைக்க ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக 21 மாவட்டங்களுக்கு ரூ.3.73 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் தேனி மாவட்டத்திற்கு ரூ. 7.30 லட்சம் ஒதுக்கீடப்பட்டுள்ளது. அதன்படி ஆண்டிபட்டி, பெரியகுளம், போடி, கம்பம் என சட்டசபை தொகுதி வாரியாக அறைகள் அமைக்கும் பணியை பொதுப்பணித்துறையினர், தேர்தல் பிரிவு அதிகாரிகள் இணைந்து துவங்கினர். பணி இருவாரங்களில் நிறைவடையும். என்றனர்