ADDED : ஆக 27, 2024 06:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி : தேனி பூதிப்புரம் அருகே மஞ்சுநாயக்கன்பட்டி சேர்ந்தவர் பாஸ்கரன், தனது மாமனார் ஊரான ஆண்டிபட்டி அருகே உள்ள கொப்பையம்பட்டிக்கு செல்ல, பழனிசெட்டிபட்டியில் உள்ள ஆட்டோவை வாடகைக்கு பிடித்தார். ஆட்டோவை பழனிசெட்டிபட்டியை சேர்ந்த பரமன் என்பவர் ஓட்டிக் கொண்டும், அவருக்கு உதவியாக சிவா என்பவரை உடன் அழைத்து சென்றார்.
தேனி - மதுரை மெயின் ரோட்டில் சண்முக சுந்தரபுரம் விலக்கு அருகே சென்றபோது கட்டுப்பாடு இழந்த ஆட்டோ நிலை தடுமாறி கவிழ்ந்ததில் டிரைவர் பரமன் 55, சம்பவ இடத்திலேயே பலியானார்.
ஆட்டோவில் இருந்த பாஸ்கரன், சிவா ஆகியோர் காயம் அடைந்தனர். விபத்து குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.