/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெண்கள் முன்னேற்றத்திற்கு சேவை புரிந்தோருக்கு விருது
/
பெண்கள் முன்னேற்றத்திற்கு சேவை புரிந்தோருக்கு விருது
பெண்கள் முன்னேற்றத்திற்கு சேவை புரிந்தோருக்கு விருது
பெண்கள் முன்னேற்றத்திற்கு சேவை புரிந்தோருக்கு விருது
ADDED : மே 30, 2024 04:00 AM
தேனி: பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த தொண்டு நிறுவனம், சமூக சேவகர்களுக்கு தமிழக முதல்வரால் விருது வழங்கப்படுகிறது. இவ்விருது இந்தாண்டு சுதந்திர தினத்தன்று வழங்கப்பட உள்ளது. தமிழகத்தை இருப்பிடமாக கொண்ட 18 வயதிற்கு மேற்பட்டவர்கள், 5 ஆண்டுகளுக்கு மேல் சமூக நலன், பெண்கள் முன்னேற்றத்திற்கு சேவை புரிந்தவர்கள், தொண்டு நிறுவனங்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் ஜூன் 10க்குள் பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பத்துடன் புகைப்படம், சுயவிவரங்கள், சேவை குறித்த செய்திகள் குற்றவியல் நடவடிக்கை ஏதும் இல்லை என்பதற்கான சான்று உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
இதனை தமிழக அரசின் http://awards.tn.gov.in என்ற இணைய முகவரியில் ஜூன் 20க்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.