ADDED : மே 12, 2024 04:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: பெண் குழந்தைகளுக்கு எதிரான வன் கொடுமைகள், தடுப்பு நடவடிக்கை, போதை விழிப்புணர்வு குறித்த பிரசாரம் ரயில்வே எஸ்.ஐ., முத்துபால் தலைமையில் போடி ரயில்வே ஸ்டேசனில் நடந்தது.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் நடந்து கொள்ள வேண்டிய அணுகு முறைகள் குறித்து எடுத்து கூறப்பட்டன. ரயில்வே தண்டவாளம் கடப்பதில் கவனம் குறித்தும், ரயில்வே ஸ்டேசனில் போதை, குற்ற சம்பவங்கள் செய்தால் கிடைக்கும் தண்டனை குறித்து விளக்கப்பட்டன. போதை விழிப்புணர்வு அடங்கிய ஸ்டிக்கர்களை வாகனங்களில் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டன.