ADDED : மே 27, 2024 06:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : மாவட்டத்தில் உணவுப்பொருட்கள் கலப்படம், தரமற்ற உணவுப் பொருட்கள் வினியோகம் செய்வதை தடுக்க உணவுப் பாதுகாப்புத் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதற்காக உணவுப் பாதுகபாப்புத் துறையினர் சார்பில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய 1500 குடைகள் வழங்கும் பணி நடந்து வருகிறது. பொது மக்கள் உணவுப்பொருட்கள் சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்யப்பட்டால் 94440 42322 என்ற அலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என, மாவட்ட நியமன அலுவலர் ராகவன் தெரிவித்துள்ளார்.

