/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கேரளா கறிக்கோழி, முட்டை வாத்துகள் கொண்டு வர தடை: தேனி கலெக்டர் உத்தரவு
/
கேரளா கறிக்கோழி, முட்டை வாத்துகள் கொண்டு வர தடை: தேனி கலெக்டர் உத்தரவு
கேரளா கறிக்கோழி, முட்டை வாத்துகள் கொண்டு வர தடை: தேனி கலெக்டர் உத்தரவு
கேரளா கறிக்கோழி, முட்டை வாத்துகள் கொண்டு வர தடை: தேனி கலெக்டர் உத்தரவு
ADDED : மே 01, 2024 08:01 AM
தேனி : கேரளாவில் இருந்து கறிக்கோழிகள், முட்டைகள், வாத்துகள், தீவனங்கள் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
அவரது செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் டெத்வா, செருதானா கிராமங்களில் உள்ள சில பண்ணைகளில் வாத்துகள் அடிக்கடி இறந்தன. ஆய்வில் அவை எச்.1., என்1., என்ற வைரஸ் பாதித்தது உறுதியானது. இதைத் தொடர்ந்து அந்த பண்ணையில் இருந்த கோழிகள் அனைத்தும் அழிக்கப்பட்டது.
தற்போது அங்கு நோய்பரவல் இல்லை. எனினும் தமிழக எல்லை பகுதிகளான குமுளி, போடி மெட்டு, கம்பம்மெட்டு ஆகிய இடங்களில் கால்நடைபராமரிப்புத்துறை சார்பில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அனைத்து வாகனங்களுக்கும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு பின் தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகிறது.
இந்நிலையில் கேரளாவில் இருந்து கொண்டு வரப்படும் கறிக்கோழிகள், கோழிக்குஞ்சுகள், முட்டைகள், வாத்துகள், தீவரங்கள், கோழிப்பண்ணை சார்ந்த பொருட்கள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள பண்ணைகளில் கோழிகள் உயிரிழப்புகள், பறவைக்காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் தெரிவிக்க கோழிப்பண்ணை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் கோழிக்கறி, முட்டைகளை நன்கு வேகவைத்து உண்ண வேண்டும்.
பீதியடைய தேவையில்லை. தீவனம், தண்ணீரை வேறு பறவைகளுடன் பகிர்ந்து கொள்ளாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கோழிக்கூண்டுகளை சுத்தும் செய்யும் போது முககவசம் பயன்படுத்த வேண்டும். சுத்தம் செய்த பின் கைகளை சோப்பு போட்டு நன்கு கழுவ வேண்டும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.