/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற வங்கி அலுவலர் கைது
/
பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற வங்கி அலுவலர் கைது
ADDED : செப் 15, 2024 12:17 AM
பெரியகுளம் : திண்டுக்கல் மாவட்டம், வந்தகவுண்டன் வலசு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் 23. இவர் பெரியகுளத்தில் உள்ள தனியார் வங்கியில் விவசாய கடன் வழங்கும் பிரிவில் அலுவலராக பணி புரிந்து வந்தார்.
பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 42 வயது பெண் ஒருவரிடம், விவசாய கடன் கொடுப்பது சம்பந்தமாக வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பட்டா, சிட்டா கேட்டுள்ளார். அந்தப் பெண் பட்டா, சிட்டா கொடுத்துள்ளார். கார்த்திகேயன் அந்தப் பெண்ணிடம் நீங்கள் அழகாக உள்ளீர்கள் என கன்னத்தை கிள்ள முயன்றார். அந்தப்பெண் கார்த்திகேயனை சத்தமிட்டு வெளியே தள்ளி கதவை தாழிட்டார்.
தென்கரை எஸ்.ஐ., கண்ணன், கார்த்திகேயனை கைது செய்தார்.-