/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வெற்றிலை விலை கிலோ ரூ.100 வரை குறைந்தது வரத்து அதிகம், விற்பனை சரிவு
/
வெற்றிலை விலை கிலோ ரூ.100 வரை குறைந்தது வரத்து அதிகம், விற்பனை சரிவு
வெற்றிலை விலை கிலோ ரூ.100 வரை குறைந்தது வரத்து அதிகம், விற்பனை சரிவு
வெற்றிலை விலை கிலோ ரூ.100 வரை குறைந்தது வரத்து அதிகம், விற்பனை சரிவு
ADDED : ஜூலை 31, 2024 05:38 AM
கம்பம், வெற்றிலை வரத்து அதிகரிப்பால் விற்பனை சரிந்து விலை கிலோவிற்கு ரூ.100 வரை குறைந்துள்ளது.
மாவட்டத்தில் சின்னமனூர், மார்க்கையன்கோட்டை, சீலையம்பட்டி, கம்பம், பெரியகுளம், மேல்மங்கலம், ஜெயமங்கலம், சில்வார்பட்டி, வடுகபட்டி உள்ளிட்ட பல ஊர்களில் வெற்றிலை சாகுபடியாகிறது. இங்கு விளையும் வெற்றிலையை உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களுக்கும், அண்டை மாநிலங்களுக்கும் விற்பனைக்கு செல்கிறது. குறிப்பிட்ட சில மாதங்கள் தவிர இதர மாதங்கள் அனைத்திலும் வெற்றிலைக்கு நல்ல கிராக்கி இருக்கும். குறிப்பாக திருமணங்கள், கோயில் திருவிழாக்கள் நடைபெறும் காலங்களில் அதிக கிராக்கி இருக்கும்.
கடந்த 20 நாட்களுக்கு முன்பு வெள்ளை வெற்றிலை கிலோ ரூ.300 முதல் 320 வரையிலும், கருப்பு வெற்நிலை கிலோ ரூ.280 முதல் 300 வரையிலும் விலை கிடைத்தது. கடந்த 20 நாட்களாக வெள்ளை வெற்றிலை கிலோ ரூ.260, கருப்பு வெற்றிலை கிலோ ரூ.180 என குறைந்துவிட்டது.
சின்னமனூர் வெற்றிலை விவசாயி ரவி கூறுகையில், தற்போது திருமணம், கோயில் திருவிழாக்கள் இல்லை. இதனால் வெற்றிலை விற்பனை சரிந்துள்ளது. அதே சமயம் வரத்து இருமடங்கு அதிகரித்துள்ளது. எனவே வெற்றிலை விலை குறைந்துள்ளது. இனி அடுத்த மாதம் விலை அதிகரிக்க வாய்ப்புக்கள் உள்ளது என்றார்.