/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பகவதியம்மன் கோயில் மாசி திருவிழா கோலாகலம்
/
பகவதியம்மன் கோயில் மாசி திருவிழா கோலாகலம்
ADDED : மார் 14, 2025 06:18 AM

பெரியகுளம்: பெரியகுளம் வடகரையில் பகவதியம்மன் கோயில் திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. ஏராளமான பக்தர்கள் அம்மன் தரிசனம் செய்து வருகின்றனர்.
பெரியகுளம் வடகரை மலைமேல் வைத்தியநாத சாமி கோயிலின் உபகோயிலான பகவதியம்மன் கோயில் உள்ளது. ஹிந்து அறநிலையத்துறைக்கு உட்பட்டது. பெரியகுளம் பகுதியில் கவுமாரியம்மன் கோயில் திருவிழாவிற்கு அடுத்தபடியாக பகவதியம்மன் கோயில் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். இத் திருவிழா மார்ச் 4ல் சாட்டப்பட்டது. மார்ச் 10 முதல் 19 வரை பத்து நாட்கள் திருவிழா நடக்கிறது. தினமும் அம்மன் யானை, அன்னபட்ஷி, ரிஷபம், சிம்மம், மின்விளக்குஅலங்காரத்தில் வீதி உலா வருகிறார். முக்கிய திருவிழாவான மார்ச் 18 கரகம், முளைப்பாரியும், மறுநாள் அக்னி சட்டி, பால்குடம், காவடி எடுத்தல் நடக்கும். ஏற்பாடுகளை செயல் அலுவலர் சுந்தரி, மண்டகபடிதாரர்கள் செய்து வருகின்றனர்.
--