ADDED : மே 10, 2024 05:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பாப்பம்மாள்புரம் பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழா நடந்தது.
மூன்று நாட்கள் நடந்த விழாவில் முதல் நாளில் அம்மன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் ஊர்வலமாகச் சென்று அருள் பாலித்தார். பக்தர்கள் பொங்கவிட்டு மாவிளக்கு ஏற்றி, பூஜைகள் செய்து வழிபட்டனர். காப்புக் கட்டிய பக்தர்கள் விரதம் இருந்து தீச்சட்டி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில் பெண்களுக்கான கோலப்போட்டி நடந்தது. உறியடி போட்டி, இசை நாற்காலி போட்டிகளில் பலர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இரவு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.