ADDED : ஜூன் 21, 2024 04:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: முத்துத்தேவன்பட்டி தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின் முறை மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் புதிய கலையரங்கத்திற்கான கட்டுமான பணிகள் துவங்கி பூமி பூஜை நடந்தது.
விழாவில் உறவின் முறைத்தலைவர் ராஜமோகன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் முன்னிலை வகித்தனர். பள்ளி செயலாளர் பாலசரவணக்குமார், இணைச்செயலாளர்கள் வன்னியராஜன், அருண்குமார், பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர்கள், பள்ளி முதல்வர், துணை முதல்வர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.