/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பா.ஜ., வி்ல் நட்சத்திர பேச்சாளர்கள் வராததால் அ.ம.மு.க. பிரசாரத்தில் தொய்வு
/
பா.ஜ., வி்ல் நட்சத்திர பேச்சாளர்கள் வராததால் அ.ம.மு.க. பிரசாரத்தில் தொய்வு
பா.ஜ., வி்ல் நட்சத்திர பேச்சாளர்கள் வராததால் அ.ம.மு.க. பிரசாரத்தில் தொய்வு
பா.ஜ., வி்ல் நட்சத்திர பேச்சாளர்கள் வராததால் அ.ம.மு.க. பிரசாரத்தில் தொய்வு
ADDED : ஏப் 08, 2024 04:42 AM
கம்பம்,: பா.ஜ. சார்பிலும் நட்சத்திர பேச்சாளர்கள் வராததால் அ.ம.மு.க. பிரசாரத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
தேனி லோக்சபா தொகுதியில் தி.மு.க.,வில் தங்கதமிழ்செல்வன், அ.ம..மு.க.,வில் தினகரன், அ.தி.மு.க.,வில் நாராயணசாமி, நா.த.,வில் மதன் போட்டியிடுகின்றனர்.
தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி, எம்.பி. கனிமொழி, நடிகர் சந்திரசேகர் பிரசாரம் செய்து சென்றுள்ளனர். அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து நடிகை விந்தியா, முன்னாள் அமைச்சர் உதயகுமார் பிரசாரம் செய்துள்ளார். அ.ம.மு.க. வேட்பாளரை ஆதரித்து நடிகை சி.ஆர். சரஸ்வதி மட்டும் பிரசாரம் செய்தார்.
வேட்பாளர்களை பொறுத்தவரை தி.மு.க., அ.திமு.க. தொடர்ந்து தொகுதி வாரியாக பிரசாரம் செய்து வருகின்றனர். அ.ம.மு.க வேட்பாளர் வேட்பு மனு தாக்கலுக்கு முன்பே பிரசாரத்தை துவக்கி தொகுதி முழுவதும் ஒரு ரவுண்ட் முடித்து, வெளி மாவட்டங்களுக்கு பிரசாரத்திற்கு சென்று விட்டார்.
தான் இல்லாத நாட்களில் பிரசாரத்தில் தொய்வு இருக்க கூடாது என்பதற்காக தனது மனைவி அனுராதாவை களத்தில் இறக்கி விட்டு சென்றார். அவரது பிரசாரம் நல்ல வரவேற்பு பெற்றது.
ஆனால் தொடர்ந்து அவர் பிரசாரம் செய்யவில்லை . இந்நிலையில் ஏப். 5 ல் பிரசாரம் செய்து விட்டு அன்று இரவே திருச்சி தொகுதியில் - போட்டியிடும் தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவு திரட்ட தினகரன் சென்று விட்டார்.
ஏப்ரல் 6, 7 என தினகரன் பிரசாரம் இல்லாத நிலை தொடர்கிறது. அவர் இல்லாவிட்டாலும் வேறு நட்சத்திர பேச்சாளர்களும் பிரசாரத்தில் இல்லை. கூட்டணி கட்சியான பா.ஜ. விலும் பிரசாரத்திற்கென யாரும் வரவில்லை. மாறாக தி.மு.க. அ.தி.மு.க. வேட்பாளர்கள் தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பிரசாரத்தில் தொய்வு இல்லாத நிலையை ஏற்படுத்த அ.ம.மு.க நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்சியின் பொதுச் செயலாளர் என்ற முறையில் பிற தொகுதிகளுக்கு பிரசாரத்திற்கு செல்வது சரி தான். அதே சமயம் தான் போட்டியிடும் தொகுதியில் பிரசாரத்தை தொய்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்வதும் அவசியம்.

