/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கானல் நீரான தேனி மீறு சமுத்திர கண்மாயில் சீரமைப்பு திட்டம்
/
கானல் நீரான தேனி மீறு சமுத்திர கண்மாயில் சீரமைப்பு திட்டம்
கானல் நீரான தேனி மீறு சமுத்திர கண்மாயில் சீரமைப்பு திட்டம்
கானல் நீரான தேனி மீறு சமுத்திர கண்மாயில் சீரமைப்பு திட்டம்
ADDED : ஆக 25, 2024 05:23 AM

தேனி: தேனி மீறு சமுத்திர கண்மாயில் எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா திட்டத்தில் படகு சவாரி, நடைபயிற்சி தளம் அமைக்கப்படும் என்ற வாக்குறுதி கானல் நீராக உள்ளது.
தேனி உழவர் சந்தை அருகில் 120 ஏக்கர் பரப்பிலானது மீறு சமுத்திரம் கண்மாய். இதனை நீர்வளத்துறையினர் பராமரித்து வருகின்றனர்.
இக் குளத்திற்கு மேற்கு தொடர்ச்சி மலையடிவாரம் வீரப்ப அய்யனார் மலைக்கோயில் பகுதியில் இருந்து வரும் நீர் அல்லிநகரம் மந்தைகுளம் கண்மாய் நிரம்பி மறுகால் நீர் இக் கண்மாய்க்கு வருகிறது.
இந்த குளத்தில் நீர் நிரம்புவதால் தேனியில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து இப் பகுதி ஆழ்துளை கிணறுகள் பயனடைகின்றன.
சில ஆண்டுகளாக இக் கண்மாயை ஆகாய தாமரைகள் செடிகள் ஆக்கிரமித்து நீரே தெரியாத வகையில் பச்சை பசேல் என காட்சியளிக்கின்றன. மேலும் சமூக விரோதிகள் சிலர் கண்மாய் கரையில் இறைச்சி கழிவுகள், கட்டட கழிவுகள்,குப்பை கொட்டும் இடமாக மாற்றி வருகின்றனர். இதனால் கண்மாய் மாசடைகிறது.
கடந்த ஆட்சியில் எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா திட்டத்தில் அப்போதைய முதல்வர் பழனிசாமி மீறுசமுத்திரம் கண்மாயில் படகு சவாரி, நடைபயிற்சி தளம், பூங்காஅமைக்கப்படும் என அறிவித்தார்.
முன்னாள் எம்.பி., ரவிந்தரநாத் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தற்போதைய எம்.எல்.ஏ., சரவணகுமாரிடம் நகராட்சி தலைவர் ரேணுப்பிரியா இதே கோரிக்கையை வலியுறுத்தினார். அவரும் விரைவில் நிறைவேற்றி தருவதாக எம்.எல்.ஏ., கூறியிருந்தார். ஆனால் இவை எதுவுமே நடக்காமல் சீரமைப்பு திட்டம் காணல் நீராகி உள்ளது.
பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் செங்குளத்தில் படர்ந்திருந்த ஆகாய தாமரை செடிகள் தொழிற்சாலை சமூக பாதுகாப்பு நிதி (சி.எஸ்.ஆர்., நிதி) மூலம் அகற்றி சுத்தம் செய்யப்பட்டது.
அதே போல் தேனி மீறு சமுத்திரம் கண்மாயில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரையை அகற்றி துார்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க என சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

