/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கந்து வட்டி சட்டத்தில் 4 பேர் மீது வழக்கு
/
கந்து வட்டி சட்டத்தில் 4 பேர் மீது வழக்கு
ADDED : மே 28, 2024 04:08 AM
கம்பம், : வார வட்டி கேட்டு துன்புறுத்தியதால் பெண் தூக்க மாத்திரை சாப்பிட்டு மயங்கி விழுந்ததால் இரு பெண்கள் உள்பட 4 பேர் மீது கந்து வட்டி தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
கம்பம் முதல் வார்டு துர்க்கையம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பிரவீணா 34, இவர் வடக்கு பட்டியை சேர்ந்த ஈஸ்வரி, நதியா ஆகிய இருவரிடம் தலா ரூ.1 லட்சம், ரூ.2 லட்சம் வட்டிக்கு வாங்கியுள்ளார்.
அதற்கு ரூ.ஆயிரம், ரூ.3 ஆயிரம் வீதம் வாரந்தோறும் வட்டியாக வசூல் செய்துள்ளனர்.
6 மாதங்கள் வட்டி கொடுத்த பின், தொடர்ந்து வட்டி கேட்டு மிரட்டி உள்ளனர்.
இதனால் தூக்க மாத்திரையை சாப்பிட்ட பிரவீணா மயங்கி விழுந்துள்ளார். சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
வடக்கு போலீசார் ஈஸ்வரி, நதியா, கணேசன், ராஜ்குமார் ஆகியோர் மீது கந்து வட்டி சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.